School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026 - Daily Dhuniya

Latest

Sunday, February 8, 2026

School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026



திருக்குறள்:

குறள் 501:

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.

விளக்க உரை:

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

பழமொழி :

Hard paths create strong people.

கடினமான பாதைகள் வலிமையான மனிதர்களை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி :

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்

- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

01.உலகின் மிகப்பெரிய பள்ளி எது?

சிட்டி மாண்டிசோரி பள்ளி லக்னோ,இந்தியா

City Montessori School -Locknow, India

02.பூமியின் வடக்கே உள்ள கடைசி நகரம் எது?

லாங்கியர்பைன்-நார்வே

Longyearbyen- Norway

English words :

clance-look quickly

stare -looked fixedly

அறிவியல் களஞ்சியம்

மலிவான AI சாட்பாட்கள் குறைந்த வசதி கொண்ட இடங்களில் மருத்துவ நோயறிதலை எளிதாக்குகின்றன. தோல் மீளுருவாக்கத்திற்கு உதவும் ‘rete ridges’ என்ற தண்டு செல் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. நீதிக்கதை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன. கோபுரத்தில் சுத்தம் வேலைகள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த்தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே... என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான். பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்....அவ்வளவுதான் என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்கிற்கு, நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக் கேற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி:ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

இன்றைய செய்திகள்

09.02.2026

⭐ இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

⭐சென்னையில் கடும் பனிமூட்டம் விமான சேவைகள் பாதிப்பு

⭐ சவுதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வழங்கி வந்த கச்சா எண்ணெயை விலையை குறைக்க (ரூ.25) முடிவு செய்து உள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை: தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் இந்திய அணி புதிய சாதனை.

Today's Headlines

⭐ Applications for the NEET entrance exam for admission to undergraduate medical courses can be submitted till March 8 itself.

⭐ Heavy fog in Chennai affects flight services

⭐ The Saudi Arabian government has decided to reduce the price of crude oil supplied to Asian countries, including India (by Rs.25).

SPORTS NEWS

🏀T20 World Cup: India sets a new record with the most consecutive wins.

No comments:

Post a Comment