6.75 லட்சம் அரசுப் பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிய TAPS திட்டம் - ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல்வர் உறுதி! - Daily Dhuniya

Latest

Monday, February 9, 2026

6.75 லட்சம் அரசுப் பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிய TAPS திட்டம் - ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல்வர் உறுதி!

6.75 லட்சம் அரசுப் பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிய TAPS திட்டம் - ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல்வர் உறுதி!

சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் பணியாளர் அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பிரம்மாண்டமான ‘நன்றி அறிவிப்பு மாநாடு’ இன்று நடைபெற்றது. 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (TAPS) அறிவித்து, அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திரண்டு வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நன்றி சொல்லி நமக்கான உறவைத் தூரமாக்கி விடாதீர்கள். உங்களின் வியர்வைத் துளிகள் மதிக்கப்பட வேண்டும், கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன," எனத் தனது உரையைத் தொடங்கினார்.

முதலமைச்சர் உரையின் முக்கியச் சிறப்பம்சங்கள்:

1. அரசு ஊழியர்களின் பொற்காலம்: திராவிட மாடல் அரசு என்பது அரசு ஊழியர்களின் அரசு என்று குறிப்பிட்ட முதல்வர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்காகச் செய்யப்பட்டச் சீர்திருத்தங்களை (குடும்பப் பாதுகாப்பு நிதி, கருணை அடிப்படைப் பணி, விடுப்பு ஒப்படைப்பு, மருத்துவக் காப்பீடு போன்றவை) ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

2. தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் ஆசிரியர்கள்: இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதற்குக் காரணம் ஆசிரியர்களின் தொண்டுதான் என்று பாராட்டிய அவர், திராவிட மாடல் அரசின் முத்திரை திட்டங்களான காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தது அரசு ஊழியர்களே என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

3. வரலாற்றுச் சிறப்புமிக்க TAPS திட்டம்: கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) சிறப்புகளை முதல்வர் விளக்கினார். இத்திட்டத்தின் மூலம் 6,75,000 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முக்கியப் பயன்கள்:

50% ஓய்வூதியம்: 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குக் கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம் உறுதி.

அகவிலைப்படி உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் மறைந்தால், அவரது குடும்பத்திற்கு 60% குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

பணிக்கொடை உயர்வு: ஓய்வு பெறும்போது அல்லது பணியிடை மரணமடையும் போது வழங்கப்படும் பணிக்கொடை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்பு கருணை ஓய்வூதியம்: ஏற்கனவே ஓய்வூதியமின்றிப் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் இனி ‘உரிமைத் தொகை’ வழங்கப்படும்.

4. நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் அரசு:

மத்திய அரசு வரிப்பகிர்வைக் குறைத்து, நிதி நெருக்கடியைச் செயற்கையாக உருவாக்கிய நிலையிலும், அரசு ஊழியர்களுக்காக ஆண்டுதோறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தையும், 13 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியப் பங்களிப்பையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதல்வர் உறுதி அளித்தார்.

5. அதிமுக மீது விமர்சனம்:

"அரசு ஊழியர்களின் உரிமையைப் பறித்தது அதிமுக ஆட்சிதான். உங்களை இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்த கடையல்லாத அரசு அது. ஆனால் இது அனைவரையும் அரவணைக்கும் திராவிட மாடல் அரசு. வரும் தேர்தலிலும், திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் உங்களது கனவுகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்," என அவர் முழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில், அரசு ஊழியர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்குத் தீர்வு கண்ட முதல்வருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது



ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை

"பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி." என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசியுள்ளார்.

திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது என ஜாக்டோ ஜியோ சார்பில் TAPS ஓய்வூதிய முறையை அமல்படுத்திய முதல்வருக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு இன்று நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சரின் மு க ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "அரசு ஊழியர்களுக்காக கலைஞர் செய்த சாதனைகள், சீர்திருத்தங்களை சொல்ல ஒரு மாநாடு போதாது. அரசியல்வாதிகள் கொள்கைப் பிடிப்போடு செய்யும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்போர் அரசு ஊழியர்கள் தான். ஆசிரியர்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சிறந்து விளங்குகிறது. 22 ஆண்டுகால கோரிக்கைக்கு நிறைவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22 ஆண்டுகளாக முன்வைத்து வந்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்களின் பணியால் கல்வியில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல, தொண்டு. நன்றி சொல்லி நமக்கான உறவை தூரமாக்கி விடாதீர்கள். அரசு ஊழியர்களின் கண்ணீர் துளிகளை துடைக்கவே கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள் தான் தற்போது உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். TAPS திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு கருணை ஓய்வூதியம், 'உழைப்புக்கான உரிமைத் தொகை' என்ற பெயரில் வழங்கப்படும்" என்று கூறினார்.

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திட்டமிட்டு நிதி நெருக்கடியை ம்த்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகிர்வை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. ,அத்திய அரசு வரிப் பகிர்வை குறைத்தாலும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கான மொத்த நிதியையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் நடைபெற்றுவரும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும் 'திமுக அரசை பொறுத்தவரை சொன்னதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்; நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம்' எனவும் அவர் உரையாற்றினார்

"பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள், நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேறும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

CLICK HERE TO DOWNLOAD JACTO-GEO Conference - Thanks to CM - ஜாக்டோ-ஜியோ நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு ஆற்றிய உரை PDF

No comments:

Post a Comment