நாளை 04.02.2026 வரையறுக்கப்பட்ட விடுப்பு ( ஷபேபராத் ) எடுக்கலாம்! - வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம். - Daily Dhuniya

Latest

Tuesday, February 3, 2026

நாளை 04.02.2026 வரையறுக்கப்பட்ட விடுப்பு ( ஷபேபராத் ) எடுக்கலாம்! - வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம்.

ஷபேபராத் வரையறுக்கப்பட்ட விடுப்பு எப்போது எடுக்கலாம்??

04.02.2026 அன்று வரையறுக்கப்பட்ட விடுப்பு ( ஷபேபராத் ) எடுக்கலாம்! You can take a restricted holiday (Shab-e-Barat) on February 4, 2026!

A restricted holiday (Shab-e-Barat) can be taken on 04.02.2026! - Letter from the Block Education Officer - ஷபேபராத் வரையறுக்கப்பட்ட விடுப்பு 04.02.2026 அன்று எடுக்கலாம் - உருது வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம்.

அனுப்புநர்

திரு.நூ.முஜீர்பாஷா, எம்.ஏ.பி.எட்.

வட்டாரக்கல்வி அலுவலர்

வட்டாரக்கல்வி அலுவலகம்

திருவண்ணாமலை உருது சரகம்

பெறுநர்

மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)

மாவட்டக்கல்வி அலுவலகம்

திருவண்ணாமலை

28.01. 2026

ந.க.எண்.19/ அ/ 2026

பொருள் :

தொடக்கக்கல்வி திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் உருது சரகம் ஷபேபராத் பண்டிகை 04.02.2026 அன்று கொண்டாட இருப்பதால் அன்றைய தினம் விடுமுறை நாளாக அறிவித்தல் - பணிந்து தெரிவித்தல்-சார்பு

பார்வை

* திருவண்ணாமலை மாவட்ட உருது சரக வட்டாரக் கல்வி அலுவலரின் 2025-2026 ஆம் ஆண்டு விடுமுறைப் பட்டியல்

பார்வையில் காணும் திருவண்ணாமலை மாவட்டம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான திருவண்ணாமலை உருது சரக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ முஸ்லிம்/உருது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் மற்றும் விடுமுறைப் பட்டியலில் 14.02.2026 அன்று ஷபேபராத் பண்டிகை க்காக விடுமுறை என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தற்போது 04.02.2026 (புதன் கிழமை) அன்று ஷபேபராத் பண்டிகை கொண்டாட இருப்பதால் அன்றைய தினம் விடுமுறை நாளாகவும் 14.02.2026 (சனிக் கிழமை ) அன்று பள்ளி வேலை நாளாகவும் செயல்படும் என்பதை பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன். இணைப்பு வேலை நாட்கள் மற்றும் விடுமுறைப் பட்டியல்

வட்டாரக்கல்வி அலுவலர்

திருவண்ணாமலை உருது சரகம்

நகல்

1. திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), செய்யாறு

an official letter from the Block Educational Officer of Tiruvannamalai Urdu Section to the District Educational Officer, regarding a change in the holiday schedule for the Shab-e-Barat festival in 2026.

The holiday for Shab-e-Barat has been changed from February 14, 2026, to February 4, 2026.

February 4, 2026 (Wednesday) will now be a school holiday.

February 14, 2026 (Saturday) will be a working day for the schools.





No comments:

Post a Comment