TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அறிவிப்பு. - Daily Dhuniya

Latest

Thursday, February 5, 2026

TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அறிவிப்பு.



TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அறிவிப்பு - Announcement regarding the second phase of original certificate verification and counseling for TNPSC Group-4 vacancies.

TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப். 24, 25 ஆகிய 2 நாட்கள் TNPSC அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிப்பு.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண் 07/2025 நாள் 25042025 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. முதல் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் முடிவில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிறபதவிகள் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 24.022026 மற்றும் 26.022028 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3 தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) சென்னை-600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேற்குறிப்பிட்ட இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள். நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டது. எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tamil Nadu Public Service Commission (TNPSC) regarding the second phase of certificate verification and counseling for the Combined Civil Services Examination IV (Group IV).

Dates: The verification and counseling will take place on February 24 and 25, 2026. Location: TNPSC office in Chennai.

Notification: Candidates are notified via SMS and email only; no hard copy invitation will be mailed.

Attendance: Failure to attend at the specified time will result in no re-opportunity.

No comments:

Post a Comment