Budget 2026 - Income Tax - வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்புகள் - Daily Dhuniya

Latest

Sunday, February 1, 2026

Budget 2026 - Income Tax - வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்புகள்



Budget 2026 - Income Tax - வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்புகள்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு

பலரும் அதிகம் எதிர்பார்த்து வந்த தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு இருந்ததே உச்ச வரம்பு நீடிக்கிறது.

புதிய வரி விதிப்பு முறையில்,

குறைந்தது ரூ. 4 லட்சம் வரை - வரி விதிப்பு இல்லை.

ரூ.4 லட்சம் - ரூ.8 லட்சம் வரை - 5 சதவிகிதம் வரி

ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் வரை - 10 சதவிகிதம் வரி

ரூ.16 லட்சம் - ரூ.20 லட்சம் வரை - 20 சதவிகிதம் வரி

ரூ.20 லட்சம் - ரூ.24 லட்சம் வரை - 25 சதவிகிதம் வரி

ரூ.24 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 30 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படும்.

வரிச் சட்டம், வருமான வரிக் கணக்கு

அவர் வருமான வரிக் கணக்கு மற்றும் வரிச் சட்டம், வரி விலக்குகள் குறித்த அறிவிப்பில்,

வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும்.

வெளிநாட்டு சுற்றுலாவுக்கன வரி பிடித்தம் 2 சதவீதமாகக் குறைக்கப்படும்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் எளிமையாகிறது.

வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை அறிவிக்கப்படும்

வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அறிவிக்கப்படும்.

மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தரவு மையங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்.

இந்தியாவில் தரவு மையங்களுக்கு வரும் 2047ஆம் ஆண்டு வரை முழு வரி விலக்கு அளிக்கப்படும்

No comments:

Post a Comment