சிறப்பு 'டெட்' அறிவிப்பு எப்போது? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! - Daily Dhuniya

Latest

Saturday, January 31, 2026

சிறப்பு 'டெட்' அறிவிப்பு எப்போது? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!

discussing the anticipation among teachers regarding the announcement of the special Teacher Eligibility Test (TET).

Teachers in government and private schools are required to pass the TET for employment and promotion, as per a Supreme Court order.

A government order was previously issued stating that the special TET would be conducted in January, July, and December of 2026.

An application announcement was made on December 3,, but was removed from the website the same day without explanation.

There is a strong demand for the special TET announcement to be released soon, with concerns raised about the lack of preparatory training classes.

When will the special TET (Teacher Eligibility Test) notification be released? Teachers are eagerly awaiting it!

சிறப்பு 'டெட்' அறிவிப்பு எப்போது ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

கோவை, பிப். 1-அரசு, தனியார் பள் ளிகளில் பணிப்புரி யும் ஆசிரியர்களுக்கு, ஜன., மாதமே நடத்துவ தாக தெரிவிக்கப்பட்ட, சிறப்பு' 'டெட்' தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு வலுத் துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப் புப்படி, அரசு, தனி யார் பள்ளிகளில், 1-ம் வகுப்புகளுக்கு, கற்பித் தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். இது, பணியை தொடரவும், பதவி உயர்வுக்கும் கட்ட டாயமாக்கப்பட்டது.

இதனால், டெட் தேர்ச்சி பெறாமல் பணி யில் உள்ளோருக்காக, சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் T607, 2025, அக்., மாதம் அர வெளியிடப் பட்டது.

இதில், 2026ல், ஜன வரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி. ஆர்.பி.,) மூலம் நடத் தப்படும். இதன் முடிவு களுக்கு பின், மீதமுள்ள தேர்ச்சி பெறாத ஆசி சியர்கள் எண்ணிக்கை அடிப்படையில், 2027ல் தேவைக்கேற்ப சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என தெரி விக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து, டிச. 3ம் தேதி, டி.ஆர். பி., இணையதளத்தில், சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறி விப்பு வெளியானது. ஆனால், காரணம் தெரி விக்காமல், அன்றைய தினமே, இணையதளத் தில் இருந்து விண்ணப் பம் நீக்கப்பட்டது. இத னால், விரைவில் சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பு வெளியிட வேண்டு மென்ற கோரிக்கை

வலுத்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், அரசு, உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், இத் தேர்வை எதிர்கொள்ள, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவ னம் சார்பில், மாவட்ட, வட்டார வாரியாக, வார இறுதி நாட்களில் பணி யிடை பயிற்சி வழங்கு வதாக அறிவிக்கப்பட் டது. ஆனால், எந்தவித பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படவில்லை.

அரசாணையில் குறிப் மூன்று முறை தேர்வு பிட்டபடி, ஆண்டுக்கு நடத்தினால் தான், ஆசி சியர்களால் கற்பித்தல் பணிகளோடு, சுய தயா ரிப்பு பயிற்சிகளுக்கும் நேரம் ஒதுக்க முடியும். இத்தேர்வை தள்ளி வைத்தால், பதவி உயர் வுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜனவரியில் நடத்து வதாக தெரிவிக்கப்பட்ட சிறப்பு டெட் தேர்வுக்கு, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும், அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணியில் உள்ளோருக்கு, அனு பவம் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப் பெண்கள் வழங்க வேண்டும்," என்றார்.

No comments:

Post a Comment