The 3 districts where tomorrow (31.01.2026) has been declared a school working day - CEOs' proceedings.- நாளை (31.01.2026) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள் - CEOs செயல்முறைகள்
நாளை சனிக்கிழமை (31.01.2026) 3 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் - CEOs செயல்முறைகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிப்பு.
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.
Tomorrow (31.01.2026) will be a working day for all types of schools - CEO proceedings. - நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள்
திருவள்ளூர் மாவட்டத்தில், 31.01.2026 சனிக்கிழமை அன்று, வியாழகிழமை பாடவேளைப்படி அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந /நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி. தலைமையாசிரியர்கள்முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - செவ்வாய்கிழமை கால அட்டவணை - CEO செயல்முறைகள்
செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.004/பிசி/2026 நாள்.29.01.2026
பொருள்- பள்ளிக் கல்வி -2025-2020 ஆண்டு நாட்காட்டி வேலை நாள் - விடுமுறை வழங்கியது ஈடுசெய்தல் சார்ந்து
பார்வை- பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2.12.2025 அன்று மழைக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் பொருட்டு 31.01.2026 அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
செவ்வாய்கிழமை கால அட்டவணை பின்பற்ற வேண்டும் இத்தகவலை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியபடுத்துமாறு தலைமையாசிரியர்கள்/பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்வதற்கும். மெல்ல பயிலும் மாணவர்களை சிறப்பு கவனம் செலுத்துவதற்கும் தலைமையாசிரியர்கள் திட்டமிட வேண்டும்.
காஞ்சிபுரம்
நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள் - Tomorrow (31.01.2026) will be a working day for all types of schools - CEO proceedings.
முதன்மைக் கல்வி அலுவலகம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை தொடக்க /நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2210.2025 (புதன் கிழமை) அன்று கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை விதமாகவும், தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தவும் (முதலமைச்சர் திறனறி ஈடுசெய்யும் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை தவிர்த்து) நாளை 31012026 அன்று (சனிக்கிழமை) முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment