நன்றி அறிவிப்பு மாநாடு குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட வட்டார மற்றும் உறுப்பினர்களுக்கு மாநிலக் கழகத்தின் சுற்றறிக்கை - Daily Dhuniya

Latest

Thursday, January 29, 2026

நன்றி அறிவிப்பு மாநாடு குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட வட்டார மற்றும் உறுப்பினர்களுக்கு மாநிலக் கழகத்தின் சுற்றறிக்கை



a state-level circular from the JACTO-GEO organization regarding a "Thanksgiving Conference". The circular details decisions made at a general body meeting on January 2, 2026, including plans for the conference on January 11, 2026, and mentions a call for a state-wide boycott of the Erode East by-election.

Organization: JACTO-GEO (Joint Action Council of Teachers and Employees Organizations)

Meeting Date: January 2, 2026

Conference Date: January 11, 2026

Key Decision: Boycott of the Erode East by-election

நன்றி அறிவிப்பு மாநாடு குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட வட்டார மற்றும் உறுப்பினர்களுக்கு மாநிலக் கழகத்தின் சுற்றறிக்கை - Circular from the state association to the district, block, and members of the Tamil Nadu High and Higher Secondary School Graduate Teachers' Association regarding the felicitation conference.

நமது பேரியக்கத்தின் இயக்கப் பொறுப்பாளர்களே! உறுப்பினர்களே !! உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வென்றடுக்க ஒற்றுமையுடன் வீரம் செறிந்த போராட்டத்தை உறுதியுடன் நடத்தி வருகிறோம்.

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தின் உச்சகட்டமாக 06.01.2026 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவோம் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2.1.2026 அன்று மூன்று அமைச்சர்கள் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் இறுதியில் நாளை (03.01.2026) உங்கள் கோரிக்கை குறித்து நல்ல அறிவிப்புகளை மான்புமிகு தமிழக முதலமைச்சர் வெளியிடுவார் என கூறினார்கள். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பின் காரணமாக 3.1.2026 அன்று தமிழக முதலமைச்சர் "தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS)" என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

அத்திட்டத்தில்ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெறுகின்ற ஊதியத்தில் மாதாமாதம் 10% ஊதியத்தை ஓய்வு பெறும் வரை பிடித்தம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தான் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை ஒருபோதும் ஆசிரியர் - அரசு ஊழியர் சமுதாயம் ஏற்காது, ஏற்கவும் முடியாது. மேலும் மீதமுள்ள மற்ற ஒன்பது கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. நாம் கேட்டது பழைய ஓய்வூதிய திட்டம். மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருந்த வாக்குறுதியும் - பழைய ஓய்வூதிய திட்டம் தான்.

JACTO-GEO movement expressing strong dissatisfaction with the Tamil Nadu Chief Minister's recent announcement regarding a new pension scheme.

The JACTO-GEO federation has been protesting for over 20 years for 10 demands, including the old pension scheme.

A meeting with three ministers on January 2, 2026, promised a good announcement from the Chief Minister the next day.

On January 3, 2026, the CM announced the "Tamil Nadu Assured Pension Scheme (TAPS)," which mandates a 10% salary deduction.

The movement rejects TAPS and is disappointed that the other nine demands were ignored, despite the CM's previous promise of the old pension scheme.

ஆனால் தற்போது அவர்கள் அறிவித்திருப்பது - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைத் தான். இந்த அறிவிப்பால் ஆசிரியர் – அரசு ஊழியர் சமுதாயமே நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 8-ல் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு பாராட்டு விழா என்று அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறோம். எனவே நமது இயக்க உறுப்பினர்கள் அம் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமது பேரியக்கத்தின் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய மாவட்டங்களில் சற்று ஒதுங்கி இருக்கவும், மாநாடு சார்ந்து எந்த நிதி பங்களிப்பும் தற்போதைக்கு நாம் செலுத்தவும் வேண்டாம் என மாநில கழகத்தின் சார்பாக தோழமையுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment