Press Release Hon'ble Dy CM - NAAN MUDHALVAN SCHEME PROGRAM - PDF - Daily Dhuniya

Latest

Monday, January 12, 2026

Press Release Hon'ble Dy CM - NAAN MUDHALVAN SCHEME PROGRAM - PDF



Press Release Hon'ble Dy CM - NAAN MUDHALVAN SCHEME PROGRAM - PDF

DIPR-P.R.No.048-Hon'ble Dy CM - NAAN MUDHALVAN SCHEME PROGRAM-Date 07.01.2026

CLICK HERE TO DOWNLOAD Press Release Hon'ble Dy CM - NAAN MUDHALVAN SCHEME PROGRAM - PDF

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டலின் அவர்கள் திறன் தமிழ்நாடு 2025 போட்டியில் மாநில அளவில் முதலிடம் வென்ற 70 மாணவர்களுக்கு தலா 25.000 ரூபாய் மற்றும் 2 ஆம் இடம் பெற்ற 60 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் என மொத்தம் 24.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில். திறன் தமிழ்நாடு 2025 போட்டியில் 63 திறன் பிரிவுகளின் கீழ் மாநில அளவில் முதலிடம் வென்ற 70 மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய் மற்றும் 2 ஆம் இடம் பெற்ற 59 மாணவர்களுக்கு தலா 10.000 ரூபாய் என மொத்தம் 24.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

-தொடர்ந்து 2025 26 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் 2025 டிசம்பர் மாதம் முதல் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 1.194 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக உறைவிடப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வில் 25 நபர்களும், வங்கித்தேர்வில் 44 நபர்களும், இரயில்வே தேர்வில் 11 நபர்களும் என 80 மணவ, மாணவிகள் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் 16 வெற்றியாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்றைய நிகழ்ச்சியில் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இந்தியா திறன் 2026 போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு பணிநியமனம் வழங்க முன்வந்துள்ள எல் அண்ட் டி. சோகோ (ZOHO), நிப்பான் பெயிண்ட்ஸ், ஃபெஸ்டோ, நேச்சுரல்ஸ், ஸ்ரீராமகிருஷ்ணா அட்வான்ஸ்டு டிரையினிங் இன்ஸ்டிடியூட் உம்முடி பங்காரு. ஷோபா பில்டர்ஸ், மதர்சன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை. அஸ்பயர் ஃபுட்வியர், கோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டின் மாணவர்கள் சர்வதேச கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை சூழலில் சிறந்து விளங்க தொடங்கப்பட்ட நான் முதல்வன் SCOUT (Scholarships for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) திட்டத்தின் கீழ் தற்போது தென் கொரியா நாட்டில் பயிற்சியை நிறைவு செய்த 10 மாணவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் பட்டப்படிப்பு முடிந்த பின்னர் மேற்படிப்பினை தென் கொரியாவில் தொடர சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் வழிகாட்ட முன்வந்துள்ளனர். இந்த மாணவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் கல்தேர் முன்பாக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு திறன் போட்டி காண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் அறிவியல் தொழில்நுட்ப படைப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, சிறப்பான படைப்பு உருவாக்கிய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்தும். பாராட்டும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் இ.ஆ.ப. பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு. நே.சிற்றரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப. திட்ட இயக்குநர் திருமதி செ.சாந்தி. தைபே 2025 உலக திறன்போட்டியில் வெற்றி பெற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் திரு.முகம்மது மஃபாஸ், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர் திரு சுரேந்திரன். திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவன அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

CLICK HERE TO DOWNLOAD Press Release Hon'ble Dy CM - NAAN MUDHALVAN SCHEME PROGRAM - PDF

No comments:

Post a Comment